அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்
அமைச்சர் றிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கு
அமைவாக, அதன் பிரதித் தலைவரும் முன்னாள் மாகாண
சபை உறுப்பினரும் இலங்கை அரச வர்த்தக
கூட்டுத்தாபனத்தின் தலைவருமாகிய கலாநிதி ஏ.எம்.ஜெமீலின், வறிய மக்களுக்கான 1000ம் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்குதல்
என்னும் திட்டத்திற்கமைவாக 2017-07-02 ஆம் திகதி பாலமுனையில் 125 பேருக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கும்
திட்டம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் வி.எம்.ஹுசைர் தலைமையில்
இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு இத்திட்டத்தின்
ஏற்பாட்டாளரான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வுகளை
ஆரம்பித்து வைத்தார்.
ஏற்கனவே முதலாம் மற்றும் இரண்டாம்
கட்டமாக சாய்ந்தமருது மாளிகைக்காடு மக்களை பிரதினித்துவப்படுத்தி 500 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டது அதேவேளை
எதிர்வரும் சனிக்கிழமை ஒலுவில் மக்களுக்காக இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும் அரச
வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமிலின் இணைப்பாளரும், அரச
வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தொடர்பாடல் அதிகாரியுமான ஏ.எல்.ஜஹான், கலாநிதி ஏ.எம்.ஜெமிலின்
பிரத்தியோக செயலாளர் சி.எம்.முனாஸ் மற்றும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின்
அம்பாறை மாவட்ட இணைப்பாளர் அஷ்செய்க் அஸாம் உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்களும்
ஒலுவில் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
Post a Comment