வறிய
மக்களின் சுயதொழில் அபிவிருத்திக்காக கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி
திணைகளத்தனுடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.
சமூர்த்தி
லொத்தர் சீட்டிழுப்பில் வெற்றிபெற்ற நற்பிட்டிமுனையை சேர்ந்த பயனாளி
ஒருவருக்கு சுயதொழிலை விருத்தி செய்வதற்காக வெற்றிப்பணத்திலிருந்து
முச்சக்கர வண்டி வழங்கிவைக்கப்பட்டது இந்த நிகழ்வு அண்மையில்
நற்பிட்டிமுனை சமூர்த்தி வங்கிக் கட்டிடத்தில் முகாமையாளர் எம்.எம்.எம்.
முபீன் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச
செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி அதிதியாக கலந்து கொண்டு சுயதொழிலை
விருத்தி செய்வதன் அவசியம் குறித்து உரையாற்றியதோடு முச்சக்கர வண்டியின்
ஆவணங்களையும் வெற்றியளரிடம் கையளித்தார். தலைமைபீட முகாமையாளர்
ஏ.ஆர்.எம்.சாலிஹ் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Post a Comment