
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் முயற்சியினால் 14 சுகாதார ஊழியர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (03) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் சுகாதார வெற்றிடங்களை நிரப்புவதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மத்திய சுகாதார அமைச்சிற்கு சமர்பிக்கப்பட்ட திட்டத்தை தொடர்ந்து மத்தியரசினால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் கோரப்பட்ட சில வெற்றிடங்களை நிரப்புவதற்காக அனுமதி வழங்கப்பட்டு இந்நியமனங்கள் வழங்கி வைப்பட்டது.
இதில் பாடசாலை பற்சிகிச்சையாளர் 05 பேரும், இயன்மருத்துவர் 04 பேரும், கதிரியக்க இயக்குனர் 01வரும், மருந்தாளர் 02 பேரும், மருந்து கலவையாளர் 02 பேருக்குமான நியமனம் வழங்கி வைகப்பட்டது.
போட்டிப் பரீட்சை மூலம் வழங்கப்பட்ட இந்நியமனம் மூன்று மாவட்டங்களிலும் வழங்கப்பட்டதுடன், இவர்கள் வெற்றிடங்கள் உள்ள வைத்தியசாலைகளுக்காமன பதவிகளும் மேலதிக பொறுப்புக்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் பல வெற்றிடங்கள் மிக விரைவில் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹமம்ட் நஸீர் தெரிவித்தார்.



Post a Comment