சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் 6 விக்கட்டுக்களினால் வெற்றி
சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் கல்முனை றினோன் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையிலான 18 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சினேகபுர்வ கடினபந்து கிறிக்கட் போட்டியில் சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் 6 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது.
சாய்ந்தமருது பொலிவேரியன் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ( 6 ) இடம்பெற்ற மேற்படி கிறிக்கட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை றினோன் விளையாட்டுக்கழகம் 18 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தினர் 15.2 ஓவர்களில் 151 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கட்டுக்களினால் வெற்றியை தமதாக்கிக் கொண்டனர்.
கல்முனை றினோன் விளையாட்டுக்கழகத்தின் சார்பில் அரபாத் 54 ஓட்டங்களையும் பிர்தௌஸ் 27 ஓட்டங்களையும் பெற்றனர் .
சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் ஆதில் 51 ஓட்டங்களையும் இம்திகாப் 21 ஓட்டங்களையும் வஸீம் 24 ஓட்டங்களையும் பெற்றதுடன் வஸீம் 4 ஓவர்கள் பந்து வீசி 17 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும் இல்யாஸ் 4 ஓவர்கள் பந்து வீசி 28 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும் கைப்பற்றினார்கள்.



Post a Comment