கல்முனை
டொப் ரேங் விளையாட்டுக்கழகத்தின் 900 வது கிறிக்கட் போட்டியில் 63 ஓட்டங்களினால் சாய்ந்தமருது
பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றியை
தனதாக்கிக் கொண்டது.
கல்முனை
டொப் ரேங் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் யு.எல்.எம்.பஸீர் தலைமையில் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில்
இன்று சனிக்கிழமை இடம்பெற்ற மேற்படி
கிறிக்கட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்
பதிலுக்கு
துடுப்பெடுத்தாடிய கல்முனை டொப் ரேங் விளையாட்டுக் கழகத்தினர் 19.4 ஓவர்களில் சகல
விக்கட்டுக்களையும் இழந்து 112 ஓட்டங்களை
மாத்திரமே பெற்றுக் கொண்டனர்
சாய்ந்தமருது
பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் சார்பில் நிப்ராஸ் 38 பந்துவீச்சுக்களுக்கு
63 ஓட்டங்களையும் அஹ்ஸன் அக்தர் 28 பந்து வீச்சுகளுக்கு 33 இஸ்ரத் 23 பந்து வீச்சுகளுக்கு 31 ஓட்டங்களையும்
பெற்றதுடன் பந்து வீச்சில் நிப்ராஸ் 3 ஓவர்கள்
பந்து வீசி 13 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும் தாஜுன் 3 ஓவர்கள் பந்து வீசி 15 ஓட்டங்களுக்கு
3 விக்கட்டையும் கைப்பற்றினார்கள்.
.ஆட்ட
நாயகனாக சாய்ந்தமருது பிரேவ்
லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த நிப்ராஸ்
தெரிவு செய்யப்பட்டார்.
Post a Comment