Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

இரத்னபுரி ரக்குவான புனித ஜோன்ஸ் தமிழ் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

( இரக்குவானயிலிருந்து ஏ.ஆர்.எம்.சர்ஜுன்)
 இரத்னபுரி ரக்குவான புனித ஜோன்ஸ் தமிழ் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா சிறிலங்கா டெக்லிங் டெக்னோலொஜ் கல்லூரியின் புரண அனுசரணையில் அண்மையில் கல்லூரி அதிபர் பீ.கமலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இரத்தபுரி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஹெஸான் விதானகே பிரதம அதிதியாகவும் முன்னாள் சபரகமுவ மாகாண சபை உறுப்பினர்களான அனுர அளஹியவன்ன மற்றும் அஜித் குமார மெடகம ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் எம்பிலியப்பிட்டி வலய கல்வி அலுவலக திட்டமிடல் பிரதி பணிப்பாளர் அன்ஸாப் தௌஸ் மற்றும் கொடகவெல கோட்ட கல்விப் பணிப்பாளர் ஜே.ஏ.டி.மலின்ட ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ சித்திபெற்ற மாணவன் கே.லோஸன் கவின் மற்றும் 2017 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் கல்லூரியில் வசதியற்ற மாணவர்களுக்கும் சமூர்த்தி உதவி பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.

கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கு சிறிலங்கா டெக்லிங் டெக்னோலொஜ் கல்லூரியின் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.சர்ஜுன் மற்றும் சிறிலங்கா டெக்லிங் டெக்னோலொஜ் கல்லூரியின் றக்குவான கிளையின் இணைப்பாளர் பீ.எம்.மக்கீம் ஆகியோர் கறுப்பு மேல்சட்டைகளை ( over coats ) அதிபரிடம் கையளித்தனர்.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget