அன்வர்
முஸ்தபா தேசிய காங்கிரஸில் இணைந்தார்!!!
அகில
இலங்கை மக்கள் காங்கிரஸின் நீண்டகால செயற்பாட்டாளரும் கடந்த பொதுத்தேர்தலின்போது திகாமடுல்ல மாவட்டத்தில் அக்கட்சியின் சார்பில் முதலாம் இலக்கத்தில் போட்டியிட்டவரும் சிம்ஸ் கல்வி நிறுவனத்தின் தலைவருமான அன்வர் முஸ்தபா அக்கட்சியின் செயற்பாட்டில் அதிருப்தியுற்று, அவரது பார்வையில் மக்கள் நலனில் மிகுந்த கருசனையுடன் செயற்படுவதாக கருதும் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் கரங்களைப்பற்றி தேசிய காங்கிரஸில் இணைந்துகொண்டார்.
“காலம் கழியும் உண்மை ஒளிரும்” சத்தியம் மட்டுமே நித்தியம் எனும் தலைப்பில், கல்முனை அல் றூபி அராபியன் ரெஸ்ரோரண்டில் கடந்த திங்கள் ( 9 ) இரவு இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே பத்திரிகையாளர் முன்னிலையில் மேற்படி கட்சிதாவல் இடம்பெற்றது.
இங்கு
கருத்துத் தெரிவித்த அன்வர் முஸ்தபா,
தான்
பதவிகளை முன்னிறுத்தி இந்த கட்சி தாவலை செய்ய வில்லையென்றும் கட்சியால் பெற்றுக்கொடுக்கப்பட்ட பதவிகளை தூக்கி எறிந்துவிட்டே அதாவுல்லாவின் கரங்களைப்பற்றியுள்ளதாகவும்.
கடந்த காலங்களில் மக்கள் நலனை முன்னிறுத்தியே அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கட்சியை சந்துபொந்துகளுக்கு எல்லாம் கொண்டு சென்றதாகவும் மக்கள் மன்றத்தில் அமைச்சர் றிஷாத் பதியூதீனினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றிக் கொடுக்கப்படவில்லை என்றும் சட்ட மூலங்கள் நிறைவேற்றலின்போது றவூப் ஹக்கீம் கை உயர்த்தினார் நானும்
உயர்த்தினேன் என்று சிறுபிள்ளைத் தனமாக கூறும் நிரந்தர கொள்கையற்ற ஒருவருடன் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்ற காரணமாகவுமே தேசிய காங்கிரஸில் இணைந்து கொள்வதாக தெரிவித்தார்.
ஏனைய
சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முஸ்லிம் சமூகத்தின் மீதும் உண்மையாக அக்கறையோடு செயற்படும், தேசிய காங்கிரஸில் அன்வர் முஸ்தபா போன்ற புத்திஜீவிகள் இணைந்து கொள்வது காலத்தின் தேவை என்றும் காலம் கழிந்தாலும் உண்மையை உணர்த்து உண்மையின் பக்கம் இன்னும் பலரும் இணைந்து நமது மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க ஒன்றிணைய வேண்டும் என்று கூறிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ், கிழக்குமாகாண மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு றவூப் ஹக்கீமுக்கோ றிஷாத் பதியூதீனுக்கோ அவசியமில்லை என்றும் அவைகளை இங்கு பிறந்த நாங்களே செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
வடக்கையும்
கிழக்கையும் இணைப்பதற்கு பதிலீடாக கரையோர மாவட்டம் என்ற ஒன்றை சிலர் கோர முற்படுவதாகவும் இந்த இணைப்பை தீர்மானிக்க வேண்டியவர்கள் இங்கு வாழும் மக்களே என்றும் கிழக்கு மக்களை சிலர் ரணிலிடமும் டயஸ்போராக்களிடமும் அடகுவைக்க முற்படுவதாகவும் அதற்கு கிழக்குமக்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்றும் இங்கு அதாவுள்லாஹ் கருத்துத் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது
தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்குமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தேசிய கொள்கைபரப்புச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான முகம்மட்
பஹீஜ் கிழக்கு மாகாண கொள்கைபரப்புச் செயலாளா் அகமட்
புர்கான் மற்றும் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment