ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினரும், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.ரி. ஜப்பார் அலி அவர்கள் நேற்று
( 11 ) காலை கிண்ணியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில்
வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்
பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காததனால் இன்று (12) காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் முன்னாள்
இராஜங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸனலி கிழக்கு மாகாண
கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் அம்பாறை
மாவட்ட சுற்றாடல் ஆணையாளரும் நிந்தவுர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர் பாடசாலை உதவி அதிபருமான
எம்.ரீ.நௌபல் அலி ஆகியோரின் சகோதரருமாவார்.
Post a Comment