சர்வதேச
கடற்கரையோர சுத்தப்படுத்துதல் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்கள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் இன்று கல்முனை
கடற்கரைப்பள்ளி வாசல் கரையோர பிரதேசத்தை சுத்தம் செய்யும் நிகழ்வு பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே. இராஜதுரை தலைமையில்
நடைபெற்றது.
இதில்
கரையேரம் பேணல் திணைக்கள உத்தியோகத்தர் எம்.யசூர்,பிரதி அமைச்சர் எச்.எம்.எம் ஹரிஸ் அவர்களின் இணைப்பு செயலாளர் கே.எம்.தெளபீக்,
கல்முனைக்குடி-3 கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அல் ஹாஜ் ஏ.பி ஜெளபர்,முன்னாள் மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.நிசார் ,உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை உத்தியோத்தர்கள் என பலர் கலந்து
கொண்டனர்.
Post a Comment