காரைதீவு கோட்டத்திற்குட்பட்ட மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய
ஆசிரியைகளான ஜனாபா சித்தி ஹம்ஸியா றபீக் மற்றும் ஜனாபா ஹைரூன் ஹில்மி மௌஜுட் ஆகியோர்
” ஆசிரியர் பிரதிபா பிரபா ” விருது பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை திருநாட்டின்
மாணவ மணிகளது எதிர்காலத்தை வளமாக்கும் நன்னோக்கில் இதயசுத்தியுடன் தம்மை அர்ப்பணிக்கும்
மேலான ஆசிரியப் பெரும்தகைகளை கௌரவிக்கும் வகையில் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்
கிழமை காலை 9.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கல்வியமைச்சர்
கௌரவ அகிலவிராஜ் காரியவசம் அவர்களின் அழைப்பின் பேரின் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ
வீ.ராதாகிருஷ்னண் அவர்களின் பங்குபற்றுதலோடு இலங்கை திருநாட்டின் சபாநாயகர் கௌரவ கரு
ஜயசூரிய அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
Post a Comment