அமைச்சர்
றிஷாட் பதியுதீன் இலங்கையில் அமைத்து வரும் வீடுகளுக்கு எந்த விதமான அனுமதியும் பெறத்தேவையில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும்
அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில்
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.
அமைச்சர்
றிஷாட் பதியுதீன் வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ச்சியாக வீடுகளை அமைத்து வருகின்றார். இந்த வீடுகளை கட்டுவதற்கு அவர் அனுமதி பெறுகின்றாரா? என ஊடகவியலாளர் ஒருவர்
கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன பதிலளிக்கும் போது,
“வெளிநாடுகளில்
இருந்து நிதி உதவியைப் பெற்று இலங்கையில் அமைக்கப்படும் வீடுகளுக்கு அனுமதிபெறத் தேவையில்லை. வீடுகள் அமைக்கப்படும் காணிகளுக்கு மாத்திரமே அனுமதி பெறப்பட வேண்டும். அந்த வகையில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் நமது நாட்டில் அமைத்து வரும் வீடுகளுக்கு எந்தவிதமான அனுமதியும் பெறத் தேவையில்லை” என ராஜித சேனாரத்ன
பதிலளித்துள்ளார்.
மேலும்,
வீடுகள் அமைப்பதுதான் பிரதானமானதே தவிர இவ்வாறான வேலைத்திட்டங்களில் நாட்டப்படும் அடிக்கற்களில் எந்த மொழி அமைந்திருக்க வேண்டுமென்பது முக்கியமானதல்ல எனவும் அமைச்சர் ராஜித பதிலளித்தார்.
Post a Comment