நாட்டிலுள்ள
இலட்சக்கணக்கான மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்கு காணி உறுதியை வழங்கும் சவால் மிக்க பணியை யாதார்த்தமாக்கும் நடவடிக்கையில் காணிஅமைச்சிற்கு உட்பட்ட அனைத்து நிறுவனங்களையும் ஒரே வலைப்பின்னலில் ஒன்றிணைக்கும் சவாலை வெற்றி கொள்ள வேணடும் என்று காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குட்பட்ட தகவல்கள் அடங்கிய இணையத்தளம் ஒன்று ஆரம்பித்து வைக்கும் நிகழ்விலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வு அரச நில அளவையாளர் திணைக்களத்தில் அண்மையில் இடம்பெற்றது.
Post a Comment