Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

நல்லிணக்க ஒருமைப்பாடு கிறிக்கட் போட்டியில் 5 விக்கட்டுக்களினால் பட்டிருப்பு தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடி ஆசிரியர் அணி வெற்றி


 ( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சித்திரைப் புதுவருடத்தையொட்டி பாடசாலைகளுக்கிடையில் நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மகா வித்தியாலய அதிபர் ,பிரதி அதிபர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால்நல்லிணக்க கலை கலாசார விளையாட்டுநிகழ்வுகளின் ஒரு பகுதியாக  கடந்த செவ்வாய்க்கிழமை ( 22 ) பாடசாலையில் மைதானத்தில் இடம்பெற்ற சினேகபுர்வ கிறிக்கட் போட்டியில் பட்டிருப்பு தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடி  ஆசிரியர் அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய களுதாவளை மகா வித்தியாலய ஆசிரியர் அணி  6 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 51 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பட்டிருப்பு  தேசிய  பாடசாலை , களுவாஞ்சிகுடி ஆசிரியர் அணி 4.4 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 52 ஓட்டங்களைப் பெற்று வெற்றியினை தனதாக்கிக்  கொண்டனர்.
பாடசாலை அதிபர் திரு.பே.காப்தீபன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி. சு.வரதராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். பாடசாலை பிரதி அதிபர்களான செ.செந்தில்குமார் , திருமதி.சு.சுரேஸ் குமார் , பொறுப்பாசிரியை திருமதி..புவனேந்திரராஜா  , பட்டிருப்பு தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடி சிரேஸ்ட ஆசிரியர் எம்.குமாரசிங்கம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget