Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம் கடற்கரை கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் சம்பியனானது


( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்பிட்டி பிரதேசத்தில் முதல் தடவையாக கடற்கரை கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியினை  அறிமுகம் செய்வதற்காக  இச்சுற்றுப் போட்டி அண்மையில்          ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மேற்படி கடற்கரை கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி   கண்டகுளி கடற்கரை பிரதேசத்தில் நடை பெற்றபோது அல் அக்ஸா தேசியபாடசாலையை எதிர்த்து போட்டியிட்ட பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம் வெற்றியீட்டி சம்பியனானது.
இக் கடற்கரை கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த 9 பாடசாலைகள் பங்கேற்றன.
இச் சுற்றுப் போட்டியில் பங்கேற்று சம்பியன்களான பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலய  மாணவர்களுக்கும்,இம்  மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய உடற்கல்வி ஆசிரியர் எஸ் எம் அம்ஜத் மற்றும் எச் எம் ரஜாப்டீன் ஆகியோருக்கு பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் மற்றும்   பாடசாலை அபிவிருத்திச்சங்கம் ,பழைய மாணவர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும்  தெரிவித்துள்ளனர்.
கல்பிட்டி   கோட்டமட்ட பாடசாலைகளுக்கான  மேற்படி சுற்றுப்போட்டி  கல்பிட்டி கல்விக் கோட்டத்தின் ஆசிரிய ஆலோசகர் எஸ் எம் பளீல் அவர்களினால்   ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget