தேசிய ரீதியில்
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற கணிதப்போட்டியில் பட்டிருப்பு தேசியப்
பாடசாலை , களுவாஞ்சிகுடி க.பொ.த. சாதாரணதரப்
பிரிவில் கல்வி பயிலும் மாணவன் என்.கிருந்திகரன் சர்வதேச ரீதியில் சிங்கப்புரில் இடம்பெறவுள்ள
” சர்வதேச கணிதப் போட்டியில் ” ( IMC ) கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்று இந்த நாட்டுக்கும்
கிழக்கு மாகாணத்திற்கும் பிரதேசத்திற்கும் பாடசாலைக்கும் தனது பெற்றாருக்கும் பெருமை
தேடித் தந்துள்ளார்.
அண்மையில்
மட்டக்களப்பு
திரேஸா கொன்வெண்டில் தேசிய ரீதியாக
நடைபெற்ற கணித வினாவிடை போட்டியில் தெரிவு செய்யப்பட்ட இம் மாணவன் சர்வதேச ரீதியாக சிங்கபூர் நாட்டில் பல நாடுகள் பங்கேற்கும்
கணித வினாவிடை போட்டியில் இலங்கையையும் பட்டிருப்பு தேசியப் பாடசாலையையும் பிரதிநிதித்துவப்படுத்தும்
வகையில் கலந்து
கொள்ளவுள்ளார்.
சாதனை
படைத்த மாணவனுக்கு பயிற்சிகளை வழங்கிய ஆசிரியர்களுக்கும்
பாடசாலை அதிபர் , பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் , மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி சபை , பழைய
மாணவர் சங்கம் , பாடசாலை கல்விசாரா உத்தியோஸ்தர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பாராட்டுக்களையும் வாழ்து்துக்களையும் தெரிவித்துள்ளனர்.










Post a Comment