( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
பெமிலி
றிலீப் நிறுவனம் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஒழுங்கு செய்திருந்த குடி நீர் இணைப்பை பெறமுடியாதிருந்த 14 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பை பெறுவதற்காக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு பணம் செலுத்திய பற்றுச்சீட்டை இலவசமாக வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பெரியபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனீபா
தலைமையில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது
17 ஆம் பிரிவு கிராம உத்தியோஸ்தர் எல்.நாஸரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற
மேற்படி நிகழ்வில் பெமிலி றிலீப் நிறுவன பொறியியலாளர் எம்.ஸி.கமால் நிஸாத்
, கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான எம்.ஏ.றபீக் , ஏ.ஆர்.எம்.அஸீம் , எம்.வை.ஜவ்பர் , எம்.ஐ.ஏ.அஸீஸ்
, ஜனாபா ஸுஹைல் அஸீஸ் , பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளர் எம்.ஐ.ஏ.மஜீட்
, கிராம சேவர்களுக்கான நிர்வாக உத்தியோஸ்தர் எம்.எஸ்.நளீர் , கிராம சேவை உத்தியோஸ்தர் ஏ.எம்.நிஸ்றீன்
, அபிவிருத்தி உத்தியோஸ்தர் எம்.ஐ.எம்.றிஸ்வான்
, திவிநெகும அபிவிருத்தி உத்தியோஸ்தர் ஏ.எம்.காலித்தீன்
உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment