Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் 32 ஓட்டங்களினால் வெற்றி

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் கல்முனை கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற கண்காட்சி கிறிக்கட் போட்டியில் சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் 32 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 18 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.
 சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த இம்திகாப்  70 ஓட்டங்களையும் எம்.அஸ்ஹர் 31   ஓட்டங்களையும்  உபைத் 28    ஓட்டங்களையும் பெற்றதுடன் பந்து வீச்சில்  ஏ. இல்யாஸ்  2 ஓவர்கள் பந்து வீசி 17 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும் முஹம்மட் சல்பி  1 ஓவர் பந்து வீசி 19 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினர் 18 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொணடனர்.
கல்முனை கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழத்தின் சார்பில் சுஜான் 50 ஓட்டங்களையும் ஸமீர் 48 ஓட்டங்களையும் பெற்றதுடன் பந்து வீச்சில் ஸமீர் 2 ஓவர்கள் பந்து வீசி 30 ஓட்டங்களுக்கு  4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
இப்போட்டியில்  சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்ட சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ஏ.ஜே.எம்.இம்திகாப் பிரிவெல்த் குளோபல் (Privelth_Global )நிறுவனத்தின்  உதவி தலைவர்  ஏ.எச்.ஏ. பாஸில் அவர்களிடமிருந்து  விருதினை பெற்றுக் கொண்டார்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget