ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம். றணீஸ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் மத்திய
குழுவின் உதவியுடன் மாவடிப்பள்ளி
றஹ்மானிய பள்ளிவாசல்
மையவாடிக்கு முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவரும் உள்ளூராட்சிகள் மாகாண சபை இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரிஸ் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து எல்.ஈ.டி.
மின்விளக்குகள் வழங்கி
வைக்கப்பட்டுள்ளது.
இதனை
அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ
பாவா மாவடிப்பள்ளி றஹ்மானிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர்
சபையிடம் உத்தியோக பூர்வமாக அண்மையில்
கையளித்தார்
இதன்
மூலம் இரவு நேரங்களில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதில் பல தசாப்தங்களாக இருந்து
வந்த சிரமம் நிவர்த்தி
செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது
Post a Comment