Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

உலகில் தற்கொலை அதிகமாக இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடம் - உள வளத்துறை ஆலோசகர் மனூஸ் தெரிவிப்பு


( றியாத் ஏ மஜீட் , எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
உலகில் தற்கொலை அதிகம் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தில் உள்ளது என சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் உளவளத்துறை ஆலோசகர் . மனூஸ் அபூபக்கர் தெரிவித்தார்.
.பொ. (/) பரீட்சைக்கு பின்னர் வாழ்வின் அடுத்த கட்டம் என்ன?; மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கற்றல் வழிமுறைகளும், பன்முக ஆளுமைகளும் எனும் தலைப்பில் இலவச உளவியல் கருத்தரங்கு மெட்றோபொலிடன் கல்லூரியின் தவிசாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் வழிகாட்டலில் மெட்றோபொலிடன் கல்லூரியின் ஏற்பாட்டில்  கடந்த சனிக்கிழமை கல்முனை ஆஸாத் பிளாஸா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் வளவளராக கலந்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு மனூஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,

ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாக எமது நாடு காணப்படுகின்றது. இயற்கை எழில் கொண்ட நாடாகவும் உல்லாசப் பயணிகள் விரும்பும் நாடாகவும் இலங்கை காணப்பட்டாலும் உலகில் தற்கொலைகள் அதிகமாக இடம்பெறுகின்ற 10 நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது நாடாக காணப்படுவது கவலையான விடயமாகும்.

எமது நாட்டில் தற்கொலைகள் அதிகம் இடம்பெறுகின்ற மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது. இங்குள்ள மக்கள் நுண்கடன் சுமைக்குள் சிக்குண்டு அதனை திருப்பிச் செலுத்துவதில் ஏற்படும் சிக்கல்களினால் கௌரவத்திற்கு பயந்து தற்கொலை நடவடிக்கைக்கு செல்கின்றனர். இதனை அரசாங்கம் கவனத்தில் எடுத்து அங்குள்ள நுண்கடன் நிறுவனங்களுக்கு தடைகளை விதித்துள்ளதை நாம் அறிவோம்.

நாட்டில் பரீட்சை முடிவுகள் வெளிவரும் காலங்களிலும் விவசாயிகளுக்கு விவசாயத்தில் நஷ்டம் ஏற்படுகின்ற போதும், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், காதலில் தோல்வி அடைந்தவர்கள் என இவ்வாறான காரணங்களுக்காக நாட்டில் தற்கொலைகள் இடம்பெறுகின்றன.

 .பொ. (உஃத) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் பல்கலைக்கு 2.5 வீதமான மாணவர்களே செல்கின்றனர். ஏனைய 97.5 வீதமான மாணவர்களின் நிலை என்ன? என்கின்ற கேள்வி எழுகின்றது. இந்த மாணவர்களை சரியான முறையில் வழிகாட்டுவதற்காகவே இவ்வாறான பயனுள்ள வழிகாட்டல் கருத்தரங்குகளை தனியார் கல்லூரிகள் நடத்துகின்றன. இதன் மூலம் மாணவர்கள் தங்களது எதிர்கால உயர்கல்வியை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது.

இன்று நாட்டில் மாணவர்கள் உருவாக்கும் திறன் அற்றவர்களாக காணப்படுகின்றனர். இதனை இவ்வாறான பயனுள்ள வழிகாட்டல் கருத்தரங்குகள் மூலம் மாற்றியமைத்து வருகின்றோம். மாணவர்கள் புதிது புதிதாக தங்களது சிந்தனைகளையும், கற்பனைகளையும் வியாவித்தல் வேண்டும்.

யுத்த காலங்களில் உயர் கல்வியை கொழும்பில் கற்பதற்காக எமது இப்பிராந்திய மாணவர்கள் பல இராணுவ சோதனைச் சாவடிகளைக் கடந்து கற்ற காலங்கள் போய் இன்று உங்கள் காலடியில் உயர்கல்வியை கற்கின்ற நிலைமையினை இன்று மெட்றோபொலிடன் கல்லூரி எமது பிராந்திய மாணவர்களுக்கு உருவாக்கியுள்ளது. இதனை எமது மாணவர்களும், பெற்றோர்களும் சரியான முறையில் பயன்படுத்து எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலேயே பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிடும் நிலை அதிகமாக காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கருத்தரங்கில் கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரியின் பிரதி அதிபர் என். தர்சான் நதிஹா, மெட்றோபொலிடன் கல்லூரி கல்முனைக் கிளையின் முகாமையாளர் சாகுல் மிர்ஸான், சிரேஷ்ட சந்தைப்டுத்தல் உத்தியோகத்தர் பௌசுல் சாஜித், கணக்கு எழுதுனர் .எம்.சஜாஸ், இளைஞர் சேவை அதிகாரி .எம்.றியாத் உள்ளிட்ட மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget