இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைத்து தரப்பினரதும் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இநத நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை இந்திரஜித் குமாரசுவாமிக்கான உத்தியோகபூர்வ நியமனம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனின் பதவிக்காலம் கடந்த 30ம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் அந்தப் பதவி குறித்து ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
1950ம் ஏப்ரல் ஆண்டு பிறந்த டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி பொதுநலவாய அமைப்பின் பொருளாதார அலுவல்கள் பிரிவின் முன்னாள் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Post a Comment