வெள்ளி விழா காணும் முன்னால் அதிபா், அதிபர்மணி அல்-ஹாஜ்
ஏ.எச்.ஏ.பஸீர் அவா்களுக்கு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் சேவை நலன்
பாராட்டி கெளரவிக்கும் பெருவிழா இன்று (14) கல்லூரியின் எம்.சி.ஏ.ஹமித் அரங்கில்
மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
கல்லூரி அதிபர் திருமதி லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நகர
திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக
கலந்து கொண்டார்.
மேற்படி விழாவில் கெளரவ அதிதிகளாக விளையாட்டுத்துறை பிரதி
அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர்
அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.ரஸாக் (ஜவாத்), ஆரிப் சம்சுதீன் மற்றும் பாடசாலை அதிபர்கள்,
ஆசிரிய ஆசிரியைகள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவிகள்
உட்பட அதிதிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment