Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | சாய்ந்தமருதில் டெங்கு அபாயம் தீவிரம்; இன்றும் ஒரு சிறுவன் உயிரிழப்பு!

-அஸ்லம் எஸ். மௌலானா, இன்ஸாப்-
டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த முஹம்மத் சபீக் முஹம்மத் நுஷாக் எனும் 11 வயதுச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (12) சனிக்கிழமை இரவு இச்சிறுவன் மரணித்துள்ளார்.

அதேவேளை கல்முனை தெற்கு மற்றும் கல்முனை வடக்கு ஆகிய இரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 40 பேரும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேருமாக கல்முனை மாநகர சப்பைப் பிரிவில் மொத்தம் 59 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு வைத்தியசாலைகளில் தீவிர கண்காணிப்பின் கீழ் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இப்பிரதேசங்களில் டெங்கு தாக்கம் திடீரென அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள், பிரதேச செயலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையம் என்பன இணைந்து சில அவசர நடவடிக்கைகளை எடுப்பதற்கு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் பள்ளிவாசல்கள் ஒலிபெருக்கிகளில் பொது மக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்குதல், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ளல், சுற்றாடல் சுத்திகரிப்பை முன்னெடுத்தல், டெங்கு நுளம்பு பரவலுக்கு வாய்ப்பாக வீட்டு சுற்றாடலை வைத்திருப்போர் மீது நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுப்படவுள்ளன.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget