கண்டி, கல்ஹின்னை பிரதேசத்தில் இன்று (20) காலை துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்காரணமாக முபீத் (14), நாஸிர் (20) ஆகியோர் படுகாயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முபீத் எனும் இளைஞர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீதியின் சந்தியில் நின்றுகொண்டிருந்த இவர்கள்மீது வீதியால் வந்த சிவப்பு நிற காரில் இருந்த இனம்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த நேரடிக் காட்சி அருகில் இருந்த வியாபார நிலையம் ஒன்றின் சீ.சீ.ரீவி. கமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவம் இடம் பெற்று சிறிது நேரத்தில் குறித்த காரும், சந்தேகத்தின்பேரில் கொழும்பு, மாளிகாவத்தையை சேர்ந்த நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ
Post a Comment