தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மன்றத்தின் சர்வதேச இளைஞர் தொடர்பு
பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள சர்வதேச இளைஞர் பரிமாற்ற நிகழ்வு இம்மாதம் 16ம் திகதி முதல் 24ம் வரை பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இடம்பெறவுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொள்ளும் இப்பரிமாற்ற நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கையில் இருந்து 16 இளைஞர்கள் எதிர்வரும் 16ம் திகதி பங்களாதேஷ் பயணமாகவுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சார்பாக சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட ஸமான் முஹம்மட் ஸாஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் சாய்ந்தமருது ஜீனியஸ் 7 இளைஞர் கழகத்தின் தலைவரும், சர்வதேச பொது நலவாய இளைஞர் மன்றத்தின் உறுப்பினரும், ஐக்கிய நாடுகள் இளைஞர் தன்னார்வலர்கள் அமைப்பின் பிரதிநிதியுமாவார்.
இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச இளைஞர் மாநாடு மற்றும் பலவேறு நிகழ்வில் பங்கேற்றுள்ள இவர் வியாபார முகாமைத்துவ பட்டதாரியும், கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.

Post a Comment