-ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
அம்பாரை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து ரூபாய் 92 லட்சம் பெறுமதியான உபகரணங்கள் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள சமூகசேவை நிறுவனங்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று (04) சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பொருட்களையும், உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர். சட்டத்தரணி.எம்.எம்.சஃபீர், இணைப்புச் செயலாளர் யூ.எல்.எம்.பசீர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் சமூகத் தொண்டு நிறுவனத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Post a Comment