அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிந்திரன்
கோடிஸ்வரனின் அழைப்பின் பெயரில் அம்பாறை மாவட்டத்திற்கு இரண்டு நாள்
விஜயத்தினை மேற்கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன்
இன்றும், நளையும் இப்பிரதேசத்திலுள்ள பல்வேறு பாடசாலைகளின் நிகழ்வுகளில்
கலந்து கொள்ளவுள்ளார்.
நிகழ்வுகளுக்காக வருகை தந்த கெளரவ இராஜங்க அமைச்சர் இராதா
கிருஷ்ணன் இன்று மலை (07.11.2016) கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரிக்கும்
திடீர் விஜேயதினை மேற்கொண்டு கல்லூரியின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக
விரிவாக ஆராய்ந்து அதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு
வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்வில் பாடசலை அதிபர் பி.எம்.எம். பதுருதீன், பிரதி அதிபர் ஏ.பி. முஜின், கல்முனை வலையக் கல்வி பணிப்பாளர் எம்
எஸ். அப்துல் ஜலீல், பாடசாலை பிரதி அதிபர்கள். ஆசிரியர்கள், பழைய மாணவ சங்க செயலாளர் உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
எஸ். அப்துல் ஜலீல், பாடசாலை பிரதி அதிபர்கள். ஆசிரியர்கள், பழைய மாணவ சங்க செயலாளர் உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Post a Comment