இதன்போது இறக்காமத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பான வாதப் பிரதிவாதம் இடம்பெற்றது.
அங்கு அமைச்சர் தயா கமகே அது தொடர்பான தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
அவரது உரையின் முழு வீடியோ காட்சி கீழே தரப்படுகின்றது
அதன் தமிழாக்கம்.....
அமைச்சர் தயா கமகே:
நீங்கள் கேட்பது
எனது
நிலைப்பாடு
தானே..
இப்ப
உதுமாலெப்பை.....
சரி
சரி எனக்குத் தெரியாது
எங்கட முன்னாள் மாகாண
அமைச்சர் உதுமாலெப்பையும், எமது மன்சூர் பாராளுமன்ற
உறுப்பினரும் பேசிக்கொள்கிறார்கள், சண்டையிடுகிறார்கள் புத்தர் சிலை வைத்ததாக
சரியா.. ஆனால்
இப்போது இங்கு சொல்லும்வரை எனக்கு அது தொடர்பாக எதுவும் தெரியாது..
சரியா... எமது இலங்கையில் பன்சல்களில்
நாளொன்றுக்கு 100, 200 புத்தர் சிலைகளாவது வைக்கக்
கூடும். பெளத்தர்கள் அதற்காக எம்மிடமும் உதவி
கோருவார்கள், நிதி
சேகரிப்பார்கள் சரியா.
அரசியல் யாப்பில்
தெளிவாக உள்ளது பௌத்த மதத்துக்கு
முதல் இடம் வழங்குவதென்று. அடுத்தது
உங்கள் கட்சிகளின் தலைவர்கள், தமிழ் கட்சிகளின் தலைவர்கள்,
கிறிஸ்தவ தேவாலய மதத் தலைவர்கள்
அனைவரும் பௌத்த மதத்துக்கு முதலிடம்
தருவதாக இணங்கியுள்ளனர்.
அதேவேளை
மைத்ரிபால சிரிசேன ஜனாதிபதியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சரவையும் கூட
அதை அனுமதித்துள்ளது.
அதேவேளை வரலாற்றை எடுத்துப் பார்க்கையில் தீகவாபி பன்சலைக்கு
12 ஆயிரம் ஏக்கர் நிலம் சொந்தமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தீகவாபியிலிருந்து
அந்த 12 ஆயிரம் ஏக்கரையும் பார்க்கும் பொளுது கல்முனை, பொத்துவில் அனைத்தும் அதற்கே
சொந்தம். அதுமட்டுமல்ல தொல்பொருள் தினைக்களத்துக்கு உரிய இடங்களை தோண்டும்போது வருவதெல்லாம்
புத்தர் சிலைகள்… அதுபோல எங்கு தோண்டினாலும்
வருவது புத்தர் சிலைகள்.. ஏன் பாகிஸ்தானில் தோண்டினாலும் வருவது புத்தர் சிலைகள்தான்..
பாகிஸ்தான் முஸ்லிம்கள் அதனை பாதுகாத்துவருகின்றனர்.. நான் அவர்களது அழைப்பின்பேரில்
கடந்த வெசாக்கிற்கு அங்கு சென்றிருந்தபோது அதனைக் காணக்கிடைத்தது.
ஆனபடியால் இந்த புத்தர் சிலை விவகாரத்துக்காக நீங்கள்
சண்டையிட வேண்டாம்..
முஸ்லிம்கள், சிங்களவர்கள், தமிழ் மக்கள் அனைவரும் சமாதானமாக வாழ்கின்றனர்.
அதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர்
”அமைச்சர் அவர்களே புத்தர் சிலையை வணங்கக்கூடிய குடியிருப்பாளர்கள் யாரும் அவ்விடத்தில்
வசிக்கவில்லையே”
தயா:
யார் புத்தர் சிலை வைக்கப்போனாலும்
நான் சாது சாது சாது எனக்கூறி அவர்களுக்கு என்னாலான நன்கொடைகளை வழங்குவேன். இந்நாட்டில்
புத்தர் சிலை வைப்பதை தடுக்கக் கோரினால் அது பிழை. அவ்வளவுதான் என்னால் சொல்லமுடியும்.
மன்சூர்
”இதற்காகவா நாங்கள் ”யஹபாலன” அரசை உருவாக்கினோம்”
தயா:
”யஹபாலன” அரசாங்கம் இருப்பதற்காக புத்தர்
சிலை வைக்க முடியாதென்றால் அதற்கு என்னால் உடன்பட முடியாது. சரியா அப்படியாயின் இந்த அமைச்சுப்பதவியை வீசிவிட்டு வீட்டுக்கு
செல்வேன். அமைச்சு ஒன்றும் எனக்கு பெரிதல்ல
மன்சூர்
”அமைச்சரின் உத்தரவின்படியா அது இடம்பெற்றது”
தயா:
என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள்ளுங்கள். எனக்கென்றால் தெரியாது. இப்போது வரைக்கும்.
என்னிடம் புத்தர் சிலைவைக்கவென்று யாராவது உதவிகேட்டால் நான் சாது சாது சாது எனக்கூறி
அவர்களுக்கு என்னாலான நன்கொடை வழங்குவேன். அவ்வளவுதான்.
Post a Comment