உலகில் மிகவும் பலம்பொருந்திய உலக வல்லரசு அமெரிக்காவின் அடுத்த
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இறுதி கட்ட வாக்கெடுப்பு இன்று
(08) இடம்பெறுகின்றது.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் நாட்டின் தலைவர் மாத்திரமின்றி அரசாங்கத்தின் தலைவராகவும் உலகின் மிகப்பெரிய இராணுவ அமைப்பின் சிரேஷ்ட தளபதியாகவும் செயற்படுவார்.
அமெரிக்காவின் 58 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் ஹிலரி கிளின்டன் ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மக்களின் நேரடி வாக்குகளினால் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவதில்லை.
அனைத்து மாநிலங்களிலும் அதிக வாக்குகளை பெறும் வேட்பாளருக்கு மாநிலங்கள் வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து தேர்தல் கல்லூரி வாக்குகளும் அளிக்கப்படும்.
இந்த முறைமையின் கீழ் 538 வாக்குகளில் இரண்டில் ஒரு தரப்பினரின் ஆதரவை பெற்றவர் ஜனாதிபதியாக தெரிவாவார்.
ஆரம்பகட்ட வாக்களிப்பு அனுமதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் 42 மில்லியன் மக்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய இறுதிக்கட்ட வாக்களிப்புக்கள் நிறைவடைந்த பின்னர் இறுதி தேர்தல் முடிவுகள் ஜனவரி மாதம் முதல் பகுதியில் வெளியிடப்படும்.
இதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றவர் ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்பார்.
இதுவரையான கருத்துக் கணிப்புக்களின் பிரகாரம் ஹிலரி , ட்ரம்பை காட்டிலும் 4 முதல் 5 வீதம் முன்னிலையில் உள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment