கல்முனை அஸ்றப்
ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் குருதி தட்டுப்பாட்டினை நிவர்த்தி
செய்யம் வகையில் சாய்ந்தமருது உதவும் கரங்கள் அமைப்பு கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இவ்வருடம்
மூன்றாவது தடவையாக ஒழுங்கு செய்திருந்த இரத்த தான முகாம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
சாய்ந்தமருது
உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் எஸ்.ரீ.ஜாஸீர் அஹமட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி
இரத்த தான நிகழ்விற்கு கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த
வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி எம்.எஸ்.நுஸரத்
பேகம் தலைமையிலான தாதிமாரும் வைத்தியசாலை உத்தியோஸ்தர்களும்
ஊழியர்களும் பெரிதும் ஒத்துழைப்பு நல்கியதுடன் சாய்ந்தமருது உதவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களும்
ஏனைய நலன்விரும்பிகளும் இரத்த தானம் வழங்கி உதவினார்கள்.
குருதி தானம்
வழங்கிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் சாய்ந்தமருது உதவும் கரங்கள் அமைப்பின் செயலாளர்
கே.எம்.ஜயாத் நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன் ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் இவ்வாறான
மனிதாபிமானமுள்ள நிகழ்விற்கு தொடர்ந்தும் உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.
Post a Comment