முன்னாள்
ராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸனலியின் சகோதரர் எம்.ரீ.
ஜப்பார் அலி பயணித்த வாகனம் கிண்ணியாவிலுள்ள பாலத்திற்கருகில் பஸ்ஸுடன்
நேருக்கு நேர் மோதுண்டதில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை லைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று
( 11 ) காலை தனிப்பட்ட வேலை காரணமாக திருகோணமலைக்கு செல்லும் வழியில் திருகோணமலையிலிருந்து
பயணித்த பஸ்ஸுடன் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து
சம்பந்தமாக கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment