நேற்று அதிகாலை
4.30 மணியளவில் மாரவில – மஹவெவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து
கொழும்பு நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மின்கம்பம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அத்துடன்
இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்து மாரவில மற்றும் சிலாபம்
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த 19 பேரில் 16 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தினால்
பஸ்ஸினுள் சிக்கியிருந்த காயங்களுக்குள்ளானவர்களை பிரதேச மக்கள் பலத்த சிரமத்தின் மத்தியில் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களுள் புத்தளம் இராணுவ முகாமிலிருந்து விடுமுறை பெற்று தமது வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்த நான்கு இராணுவ வீரர்களும், அடங்குவதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து
தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment