சமூக
சேவைகள் நலன்புரி அமைச்சு காரைதீவு பிரதேச செயலகத்தோடு இணைந்து, சமூக சேவைகள் நலன்புரி அமைச்சின் ஏற்பாட்டில் கௌரவ அமைச்சர் தயா கமகே மற்றும் கௌரவ பிரதி அமைச்சர் அனோமா கமகே ஆகியோரது அனுசரணையுடன் “ஆதவற்ற உங்களுக்கு உதவ என்றும் உங்களுடன் நாம் இருப்போம்” எனும் தொனிப்பொருளிலான நடமாடும் சேவையொன்று இன்று (19) காரைதீவு கலாசார மட்டபத்தில் இடம்பெற்றது.
அமைச்சர்களின்
அம்பாறை மாவட்ட கரையோர இணைப்பாளர் திரு. வீ.வினோகாந்த் அவர்களின் தலைமையில், காரைதீவு பிரதேச செயலாளர் திரு.வேதநாயகம் ஜெகதீசன், கௌரவ பிரதேசசபை தவிசாளர் திரு .கி.ஜெயசிறில், கல்முனை
மாநகர சபை உறுப்பினர் திருமதி.செலஸ்டினா ராகல், அமைச்சர்களின் காரைதீவு இணைப்பாளர் விஜிதரன் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இன் நடமாடும் சேவையில் இலவச விசேட தேவையுடையோருக்கான செயலகம், முதியோருக்கான செயலகம் என்பன கலந்துகொண்டு தமது சேவையை வழங்கியிருந்தன.
பெருமளவிலான
பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்ற இந் நடமாடும்
சேவையில் ஆயுர்வேத வைத்திய முகாம், கண் பரிசோதனை, மூக்கு கண்ணாடி வழங்கல், முதியோர் அடையாள அட்டை, மாமரக் கன்றுகள் என்பன முற்றிலும் இலவசமாக வழங்கபட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment