கல்முனை
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
டொக்டர் ஏ.எல்.அலாவுதீன் அவர்களின் தலைமையில்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கீழுள்ள சுகாதார
சேவை நிலையங்களில் கடமை புரியும் சுகாதார
சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் காலடிக்கு சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வுகள் வழங்கப்படும் திட்டத்தின் அடிப்படையிலான நடமாடும்
சேவை சம்மாந்துறை
ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதில் பணிமனையின்
சகல உப பிரிவுகளையும் சேர்ந்த பொறுப்பான உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு தீர்வுகள் இயலுமானவரை
பெற்றுக் கொண்டனர்.
கல்முனை பிராந்திய
சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கீழ் 40 க்கு மேற்பட்ட சுகாதார சேவை நிலையங்களும்,
1500 க்கு மேற்பட்ட சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் உள்ளடங்குகின்றனர்.
சுகாதார சேவைகள்
உத்தியோஸ்தர்களின் நாளாந்த செயற்பாடுகளின் போது சேவை நிலையங்களும், உத்தியோகத்தர்கள்
ஊழியர்களும் சில தடங்கல்களுக்கு முகங்கொடுப்பது தவிர்க்க முடியாதது. உதாரணமாக, சேவை
உறுதிப்படுத்தல், தரமுயர்வு, சம்பள முரண்பாடு, இடமாற்றம், நானாவிதக் கொடுப்பனவுகள்,
உபகரணங்களின் செயலின்மை, சேவையில் நடைமுறைச் சிக்கல்கள் போன்றவற்றைச் சொல்லலாம்.
இவற்றின்
காரணமாக, தினமும் குறிப்பாக புதன்கிழமை நாளில் பலரும் பிராந்தியப் பணிமனைக்கு வருவது
அவதானிக்கப்பட்டது. இது பிராந்தியத்தில் சுகாதார சேவையில் பின்னடைவை ஏற்படுத்தலாம்
என்பதைக் கருத்திற்கொண்டு இன்றைய தினம்
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிராந்திய மார்புநோய் தடுப்பு பிரிவு, மல்வத்தை மற்றும் சென்னெல் கிராம அடிப்படை வைத்திய பராமரிப்பு கூறு வைத்தியசாலைகள் ஆகியவற்றைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஊழியர்களுக்கு தமது குறைகளை நிவர்த்தி செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
நடமாடும்
சேவையை நடாத்தி உத்தியோகத்தர்கள் ஊழியர்களின் காலடிக்கு சென்று அவர்களின் குறைகளைக்
கேட்டறிந்து தீர்வுகள் வழங்கப்படும் திட்டம் இவ்வருடம் ஆரம்பிக்கப்பட்டது இதன்
முதலாவது நடமாடும் சேவை கடந்த மாதம் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Post a Comment