மட்டக்களப்பு
கொழும்பு பிரதான வீதியின் புணாணை பகுதியில் யானையுடன் வேன் மோதியதில் ஒருவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த வேன் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின் புணானை மியான்குள வீதியினை கடக்க முற்பட்ட யானையில் மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து
சம்பவத்தில் வாகன சாரதியான அக்கரைப்பற்றை
சேர்ந்த ஏ.ஜி.றிக்காஸ் (வயது
30) என்பவரே காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், வாகனத்தில் பயணித்த இருவர் எந்தவித காயங்களுமின்றி தப்பியுள்ளனர்.
இவ்விபத்துச்
சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்ற போது மழை பெய்தமையால் யானை வருவது தெரியவில்லை என பயணித்தவர்கள் தெரிவித்தார்.




Post a Comment