கடந்த
27.01.2019 அன்று தனது அறுபதாவது வயதில் தனது முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆசிரியர் சேவையில் இருந்து களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த திரு. சீ.சிவசங்கரலிங்கம் ஆசிரியர் (சிவா
சேர்) ஓய்வு பெற்றார்.
1987 ஆம்
ஆண்டு ஆசிரியர் சேவையில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடியில் இணைந்து கொண்ட இவர் இதே பாடசாலையிலேயே 32 வருடங்கள் கற்பித்து ஓய்வு பெற்றார்.
மட்டக்களப்பு
, வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பௌதீக விஞ்ஞான பட்டதாரியாக பட்டம் பெற்ற இவர் மாணவர்களுக்கு கணித பாடத்தினை கற்பித்ததுடன் பாடசாலை கணக்காளராகவும் மிக நீண்ட காலம் சேவையாற்றியுள்ளார்.
இவர்
தனது ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதனையொட்டி மிகப்பிரமாண்டமான முறையில் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில்
அண்மையில் பிரியாவிடை நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஆரம்ப
பிரிவு முதல் உயர்தரம் வரை கல்வி பயிலும் மாணவர்கள் அன்னாருக்கு மாலை அணிவித்ததுடன் வாழ்த்துப் பத்திரங்களையும் வழங்கி வைத்தனர்.
Post a Comment